• May 13 2024

வல்வெட்டித்துறை வானில் அலங்கரித்த பல்வேறு வகையான பட்டங்கள்!!

Tamil nila / Jan 15th 2023, 8:10 pm
image

Advertisement

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.




பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். பலவிதமான வண்ணங்களில் பட்டம் செய்து அதை பறக்க விடும் பொழுது நாமே பறப்பது போன்ற பரவசமும், மகிழ்ச்சியும் ஏற்படும். 




பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அந்தவகையில் வாடைகாற்று ஜப்பசி மாதத்திற்கு பிறகு ஆரம்பித்தாலும் கூட அக்காலப்பகுதி மழை என்பதனால் பட்டம் ஏற்றுவதற்கு பொருத்தமான காலமாக இருக்காது. இதனால் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தைமாதத்தினையும் விசேட தினமாக தைப்பொங்கலையும் பட்டப் போட்டி நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுகின்றார்.. ஏந்தவொரு கலைக்குமே போட்டி என்று ஒன்று இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை இன்னுமே வளர்ச்சியடையும்.



.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் பட்டப் போட்டி 2011ம் ஆண்டு ஆரம்பமானது. வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக் கூடாது என்றும், அதனை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்று உழைத்தவர்கள் பலர் உள்ளனர். . இன்றைய நிலையில் விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத் திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.




இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.இதனடிப்படையில் இன்றும் இப் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 



வல்வெட்டித்துறை வானில் அலங்கரித்த பல்வேறு வகையான பட்டங்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். பலவிதமான வண்ணங்களில் பட்டம் செய்து அதை பறக்க விடும் பொழுது நாமே பறப்பது போன்ற பரவசமும், மகிழ்ச்சியும் ஏற்படும். பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அந்தவகையில் வாடைகாற்று ஜப்பசி மாதத்திற்கு பிறகு ஆரம்பித்தாலும் கூட அக்காலப்பகுதி மழை என்பதனால் பட்டம் ஏற்றுவதற்கு பொருத்தமான காலமாக இருக்காது. இதனால் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தைமாதத்தினையும் விசேட தினமாக தைப்பொங்கலையும் பட்டப் போட்டி நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறுகின்றார். ஏந்தவொரு கலைக்குமே போட்டி என்று ஒன்று இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை இன்னுமே வளர்ச்சியடையும்.யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் பட்டப் போட்டி 2011ம் ஆண்டு ஆரம்பமானது. வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக் கூடாது என்றும், அதனை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்று உழைத்தவர்கள் பலர் உள்ளனர். . இன்றைய நிலையில் விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத் திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.இதனடிப்படையில் இன்றும் இப் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement