• Jan 16 2025

இலங்கையர்களுக்கு இம்மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகள்! அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jan 14th 2025, 12:32 pm
image

 

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், 

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும்  டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையர்களுக்கு இம்மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகள் அமைச்சர் அறிவிப்பு  இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்மேலும்  டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement