• Jul 04 2024

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர..?

Chithra / Mar 31st 2024, 1:35 pm
image

Advertisement

 

 இந்த நாட்டில் எந்த தேர்தல் நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பசில் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற கட்சி மாவட்ட மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பொதுஜன பெரமுன கட்சி, பசில் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல, நாமல் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல. அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சி. 

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும். 

மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க கூறியுள்ளார். 

நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.


 

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர.   இந்த நாட்டில் எந்த தேர்தல் நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பசில் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.பதுளையில் இடம்பெற்ற கட்சி மாவட்ட மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் பொதுஜன பெரமுன கட்சி, பசில் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல, நாமல் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல. அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சி. மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும். மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க கூறியுள்ளார். நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement