• Jul 11 2025

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ விபத்து..!

Chithra / Mar 31st 2024, 1:42 pm
image

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் இன்று ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ விபத்து. நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் இன்று ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement