• Jun 30 2024

மாயமாகும் தொலை தொடர்பு கம்பிகள்...! பொலிஸாரின் வலைவீச்சில் நால்வர் கைது...!

Sharmi / Jun 28th 2024, 2:54 pm
image

Advertisement

தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

பெறுமதிமிக்க தொலைத்தொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது தொலைத்தொடர்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாக ஹட்டன் தொலை தொடர்பு நிறுவன அதிகாரியால் சுமார் 7 முறைப்பாடுகள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் மஸ்கெலியா தொலை தொடர்பு நிலையத்தில் இருந்து நல்லதண்ணி,மறே,மவுசாகல, லக்கம்,புரவுன்லோ மற்றும் கஷ்ட பிரதேசங்களுக்கு செல்லும் தொலை தொடர்பு கம்பிகள் வெட்டப்பட்டு திருடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கம்பிகள்,அலுமினியம் உட்பட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க பட்டுள்ளது என புஸ்பகுமார தெரிவித்தார்.


மாயமாகும் தொலை தொடர்பு கம்பிகள். பொலிஸாரின் வலைவீச்சில் நால்வர் கைது. தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யபட்டவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.பெறுமதிமிக்க தொலைத்தொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது தொலைத்தொடர்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்,கடந்த இரண்டு வருடங்களாக ஹட்டன் தொலை தொடர்பு நிறுவன அதிகாரியால் சுமார் 7 முறைப்பாடுகள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் மஸ்கெலியா தொலை தொடர்பு நிலையத்தில் இருந்து நல்லதண்ணி,மறே,மவுசாகல, லக்கம்,புரவுன்லோ மற்றும் கஷ்ட பிரதேசங்களுக்கு செல்லும் தொலை தொடர்பு கம்பிகள் வெட்டப்பட்டு திருடப்பட்டதாகவும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கம்பிகள்,அலுமினியம் உட்பட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க பட்டுள்ளது என புஸ்பகுமார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement