• Nov 19 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்!

Chithra / Nov 5th 2024, 12:57 pm
image


நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. 

இதன்போது வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களிற்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் உதவித் தேர்தல் ஆணையாளர் D.C அரவிந்தராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களாக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 


நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று நடைபெற்றது.குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. இதன்போது வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களிற்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் உதவித் தேர்தல் ஆணையாளர் D.C அரவிந்தராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களாக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement