• Jan 26 2025

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

Tharmini / Jan 23rd 2025, 4:47 pm
image

சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று(23) திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரச  துறை மூலம் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வழங்குவது என்றும், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.





சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று(23) திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. கிழக்கு மாகாண குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரச  துறை மூலம் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வழங்குவது என்றும், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement