• Mar 03 2025

சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்யும் பணியை JVP காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் - சம்பிக்க கருத்து

Chithra / Mar 3rd 2025, 7:22 am
image


சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எரிபொருள் கையிருப்பில் எவ்வித நெருக்கடியும் தற்போது ஏற்படவில்லை. எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் எரிபொருள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை  

குற்றஞ்சாட்டுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்கான ஆரம்பத்தை மக்கள் விடுதலை முன்னணியே ஆரம்பித்து வைத்தது.

விடுதலை புலிகள் அமைப்பின் ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது. 

மிகுதி ஆயுதங்கள்  அழிக்கப்பட்டன. 

மக்கள் விடுதலை முன்னணி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்  அரச படைகளில் இருந்து கைப்பற்றிய பெரும்பாலான ஆயுதங்கள் முழுமையாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலைமுன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில்  உண்மையை நிலைநாட்டுவதாக 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவதை வரவேற்கிறேன்.

தலதாமாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி தான் தாக்குதல் நடத்தியது. ஆகவே அதற்கு அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்றார்


சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்யும் பணியை JVP காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் - சம்பிக்க கருத்து சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,எரிபொருள் கையிருப்பில் எவ்வித நெருக்கடியும் தற்போது ஏற்படவில்லை. எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் எரிபொருள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை  குற்றஞ்சாட்டுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்கான ஆரம்பத்தை மக்கள் விடுதலை முன்னணியே ஆரம்பித்து வைத்தது.விடுதலை புலிகள் அமைப்பின் ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது. மிகுதி ஆயுதங்கள்  அழிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்  அரச படைகளில் இருந்து கைப்பற்றிய பெரும்பாலான ஆயுதங்கள் முழுமையாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவில்லை.சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலைமுன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில்  உண்மையை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவதை வரவேற்கிறேன்.தலதாமாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி தான் தாக்குதல் நடத்தியது. ஆகவே அதற்கு அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்றார்

Advertisement

Advertisement

Advertisement