• Mar 03 2025

தண்டவாளத்தில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

Chithra / Mar 3rd 2025, 7:11 am
image

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கண்டேகொடை தொடருந்து நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார். 

மாணவன் தனது மொபைல் போனில் காது மாட்டியை பயன்படுத்தி தொடருந்து தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்கு தொடருந்தின் சத்தம் கேட்காததால் பின்னால் வந்த தொடருந்து அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனாவான்.


தண்டவாளத்தில் ஹேண்ட்ஸ்ஃப்ரீயுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம் அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கண்டேகொடை தொடருந்து நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார். மாணவன் தனது மொபைல் போனில் காது மாட்டியை பயன்படுத்தி தொடருந்து தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.அவருக்கு தொடருந்தின் சத்தம் கேட்காததால் பின்னால் வந்த தொடருந்து அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.விபத்தில் உயிரிழந்தவர் நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனாவான்.

Advertisement

Advertisement

Advertisement