கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்கள், புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக, விஜேபால கூறியுள்ளார்.
இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற செயல்பாடுகளில் பெரும்பாலானவை கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன,
இதனையடுத்து, SIS மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளன.
நாட்டில் மீண்டும் தீவிரவாதம் மற்றும் இனவெறி பரவுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிழித்தெறிய நடவடிக்கை எடுப்போம் என்று விஜயபால கூறியுள்ளார்.
முஸ்லிம்ளிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி பாதுகாப்பு அமைச்சர் தகவல் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்கள், புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக, விஜேபால கூறியுள்ளார்.இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதுபோன்ற செயல்பாடுகளில் பெரும்பாலானவை கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, இதனையடுத்து, SIS மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளன.நாட்டில் மீண்டும் தீவிரவாதம் மற்றும் இனவெறி பரவுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிழித்தெறிய நடவடிக்கை எடுப்போம் என்று விஜயபால கூறியுள்ளார்.