• May 16 2025

தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு; மட்டக்களப்பில் இரு வேட்பாளர் உட்பட 3 பேர் கைது!

Chithra / May 6th 2025, 3:20 pm
image


ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசிய கட்சிகளின் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி அந்நூர் பாடசாலையில வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில்  ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர்  வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து செய்யப்பட்டனர்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர்  தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்ததால் கைது செய்யப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்னர்

தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு; மட்டக்களப்பில் இரு வேட்பாளர் உட்பட 3 பேர் கைது ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசிய கட்சிகளின் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி அந்நூர் பாடசாலையில வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில்  ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர்  வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து செய்யப்பட்டனர்.அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர்  தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்ததால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்னர்

Advertisement

Advertisement

Advertisement

Buy Now