• Aug 21 2025

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகம்!

Chithra / Aug 20th 2025, 11:24 am
image

 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்  அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி அமைக்கப்பட்ட பிரத்தியேக உரிமம் வழங்கும் கருமபீடம், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 3 முதல் 17 வரை மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற வெராஹெராவில் உள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. 

குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகம்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்  அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆகஸ்ட் 3 ஆம் திகதி அமைக்கப்பட்ட பிரத்தியேக உரிமம் வழங்கும் கருமபீடம், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.ஆகஸ்ட் 3 முதல் 17 வரை மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டன.முன்னதாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற வெராஹெராவில் உள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது. குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement