• May 17 2024

அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...!

Sharmi / Apr 11th 2024, 11:55 am
image

Advertisement

சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (09) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. 

சிலோன் ஊடகவியலாளர் போரத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர் கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.எல்.இஸ்மாயில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் இந்நிகழ்வின்போது  சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 35 ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும்வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு. சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (09) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சிலோன் ஊடகவியலாளர் போரத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர் கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.எல்.இஸ்மாயில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் இந்நிகழ்வின்போது  சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 35 ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும்வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement