• Jan 09 2025

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச ஊடாக விநியோகம்

Chithra / Jan 2nd 2025, 12:40 pm
image

 

இலங்கை அரச வர்த்தக பொதுக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த அரிசி, தற்போதைக்கு சதொச ஊடாக நாடெங்கும் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

புத்தாண்டு தினத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக 780 மெட்ரிக் தொன் அரிசி, சதொச நிறுவனத்தின் கிளைகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதற்கடுத்ததாக கொழும்புத் துறைமுகத்திற்கு 5200 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய கப்பல் ஒன்றும் வந்தடைந்துள்ளது.

அதனை இறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் என்று அரச வர்த்தக பொதுக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன் ஊடாக நாட்டில் தற்போதைக்கு நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச ஊடாக விநியோகம்  இலங்கை அரச வர்த்தக பொதுக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த அரிசி, தற்போதைக்கு சதொச ஊடாக நாடெங்கும் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.புத்தாண்டு தினத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக 780 மெட்ரிக் தொன் அரிசி, சதொச நிறுவனத்தின் கிளைகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.அதற்கடுத்ததாக கொழும்புத் துறைமுகத்திற்கு 5200 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய கப்பல் ஒன்றும் வந்தடைந்துள்ளது.அதனை இறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் என்று அரச வர்த்தக பொதுக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.அதன் ஊடாக நாட்டில் தற்போதைக்கு நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை ஓரளவுக்குக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement