• Jan 11 2025

தரமற்ற தங்கூசி வலைகளை வழங்கிய பிரதேச செயலகம் - கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கிட்டு

Tharmini / Jan 8th 2025, 4:04 pm
image

தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள் பயனாளிகளுக்கு வந்த  மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2024 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு  சங்கத்தை  சேர்ந்த  41 பயனாளிகளுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

குறித்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக  மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (8.01.2024) பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பயனாளிகளால் வலைகள் தரமற்றவை என கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கிட்டு அவர்கள்

தங்கூசி கலந்து வலையில் இருப்பதால் இது பயன்பாட்டிற்கு உகந்த வலை இல்லை. இது ஒரு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை ஆகும். உரிய தரம் கொண்ட கப்பல் பீஸ் எனப்படும் முழு வலையின் பெறுமதி 16400 ஆகும்,  குறித்த  வலையை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு பிரதேச செயலகத்திடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.  தரமற்ற பாவனைக்கு உதவாத வலை ஒன்றை தந்துள்ளார்கள்

வலையில் தங்கூசி கலந்திருப்பதால் பயனாளிகள் வலை வேண்டாமென கூறியுள்ளார்கள். நாங்கள் கூறிய தரம் கொண்ட  வலையை விட பிரதேச செயலகம் எமக்கு தந்த தரமற்ற  வலையின் பெறுமதி அதிகமாக உள்ளது. அதை விட 18% வீதம் தனியாக வரி விதிக்கப்பட்டுள்ளது. 

கடையில் பொருட்கள் வாங்கும் போது பொருட்களின் விலையில்த்தான் வரி அறவிடப்படும். ஆனால் பிரதேச செயலகம் எமக்கு தந்த வலையில் தனியாக வரிக்கென 18% அறவிடப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் இந்த செயற்பாட்டை ஒரு ஊழலாக பார்ப்பதாகவும்,  எமக்கு வந்த அனைத்து வலைகளையும் திருப்பி அனுப்புவதாகவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நாங்கள் கூறிய தரம் கொண்ட வலைகளை கையளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் 

 சம்பவம் தொடர்பாக முன்னாள்  வடக்குமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கருத்து தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க பயனாளிகள் 41பேருக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கியிருந்தோம்

41பயனாளிகளுக்கும் மீன்பிடி வலைகளை வழங்குவதற்காக குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த வேளை பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறியுள்ளனர். தரம் கொண்ட வலையை விட தரமற்ற இந்த வலையின் பெறுமதி அதிகமாக இருப்பதாகவும், 

இந்த வலையை நாம் பெறுவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர். VAT வரியென கூறி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஒரு இலட்சத்துக்கும் மேல் வரி அறவிட்டிருப்பதாகவும். பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறி நிராகரித்ததாக தெரிவித்தார் 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிதியை கையளித்தவர்கள் என்ற முறையில் பயனாளிகளின் குற்றச்சாட்டிற்கு எமக்கான உரிய பதிலை தர வேண்டுமென மேலும் தெரிவித்தார்.





தரமற்ற தங்கூசி வலைகளை வழங்கிய பிரதேச செயலகம் - கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கிட்டு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள் பயனாளிகளுக்கு வந்த  மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு  சங்கத்தை  சேர்ந்த  41 பயனாளிகளுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.குறித்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக  மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு இன்று (8.01.2024) பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பயனாளிகளால் வலைகள் தரமற்றவை என கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கிட்டு அவர்கள்தங்கூசி கலந்து வலையில் இருப்பதால் இது பயன்பாட்டிற்கு உகந்த வலை இல்லை. இது ஒரு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை ஆகும். உரிய தரம் கொண்ட கப்பல் பீஸ் எனப்படும் முழு வலையின் பெறுமதி 16400 ஆகும்,  குறித்த  வலையை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு பிரதேச செயலகத்திடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.  தரமற்ற பாவனைக்கு உதவாத வலை ஒன்றை தந்துள்ளார்கள்வலையில் தங்கூசி கலந்திருப்பதால் பயனாளிகள் வலை வேண்டாமென கூறியுள்ளார்கள். நாங்கள் கூறிய தரம் கொண்ட  வலையை விட பிரதேச செயலகம் எமக்கு தந்த தரமற்ற  வலையின் பெறுமதி அதிகமாக உள்ளது. அதை விட 18% வீதம் தனியாக வரி விதிக்கப்பட்டுள்ளது. கடையில் பொருட்கள் வாங்கும் போது பொருட்களின் விலையில்த்தான் வரி அறவிடப்படும். ஆனால் பிரதேச செயலகம் எமக்கு தந்த வலையில் தனியாக வரிக்கென 18% அறவிடப்பட்டுள்ளதுவடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் இந்த செயற்பாட்டை ஒரு ஊழலாக பார்ப்பதாகவும்,  எமக்கு வந்த அனைத்து வலைகளையும் திருப்பி அனுப்புவதாகவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நாங்கள் கூறிய தரம் கொண்ட வலைகளை கையளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்  சம்பவம் தொடர்பாக முன்னாள்  வடக்குமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கருத்து தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க பயனாளிகள் 41பேருக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கியிருந்தோம்41பயனாளிகளுக்கும் மீன்பிடி வலைகளை வழங்குவதற்காக குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த வேளை பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறியுள்ளனர். தரம் கொண்ட வலையை விட தரமற்ற இந்த வலையின் பெறுமதி அதிகமாக இருப்பதாகவும், இந்த வலையை நாம் பெறுவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர். VAT வரியென கூறி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஒரு இலட்சத்துக்கும் மேல் வரி அறவிட்டிருப்பதாகவும். பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறி நிராகரித்ததாக தெரிவித்தார் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிதியை கையளித்தவர்கள் என்ற முறையில் பயனாளிகளின் குற்றச்சாட்டிற்கு எமக்கான உரிய பதிலை தர வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement