• Nov 26 2024

கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம்! யாழ். நாவற்காடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Chithra / Oct 3rd 2024, 1:40 pm
image

 கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி  யாழ். தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார்.

நாவற்காடு பிரதேசத்திற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்று 6 ஆறு மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி கிராம மக்களின் கையெழுத்து மகஜர் ஒன்று தயார்படுத்தினர்.

குறித்த மகஜர் அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சாவகச்சேரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர்.

எனினும் மக்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலரால் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் பிரதேச மக்கள் இணைந்து  தீர்வு கோரி இன்றையதினம் நாற்காடு பொதுமண்டபத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதன்போது, மாற்றாதே மாற்றாதே கிராம அலுவலரை மாற்றாதே, மக்களுக்கு ஜனநாயகம் இந்த நாட்டில் இல்லையா? மேலிடம் யார்? அரசியல் பின்னணியா? உடனடியாக அம்பலப்படுத்தவும்,  புதிய அரசாங்கம் வந்தவுடன் புதிய நியனமா? தீர்வு இல்லாவிடின் போராட்டம் தொடரும் போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் யாழ். நாவற்காடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்  கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி  யாழ். தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார்.நாவற்காடு பிரதேசத்திற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்று 6 ஆறு மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இந்த இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி கிராம மக்களின் கையெழுத்து மகஜர் ஒன்று தயார்படுத்தினர்.குறித்த மகஜர் அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் சாவகச்சேரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர்.எனினும் மக்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலரால் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் பிரதேச மக்கள் இணைந்து  தீர்வு கோரி இன்றையதினம் நாற்காடு பொதுமண்டபத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதன்போது, மாற்றாதே மாற்றாதே கிராம அலுவலரை மாற்றாதே, மக்களுக்கு ஜனநாயகம் இந்த நாட்டில் இல்லையா மேலிடம் யார் அரசியல் பின்னணியா உடனடியாக அம்பலப்படுத்தவும்,  புதிய அரசாங்கம் வந்தவுடன் புதிய நியனமா தீர்வு இல்லாவிடின் போராட்டம் தொடரும் போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement