• May 20 2024

ஊசியை நுழைய விட்டால் உலக்கையை விடுவீர்களா? காணிகள் அபகரிப்பு தொடர்பில் வியாழேந்திரன் ஆவேசம்!

Sharmi / Jan 7th 2023, 3:05 pm
image

Advertisement

ஊசியை நுழைய விட்டால் உலக்கையை விடுகின்ற கதையை போன்று மட்டக்களப்பில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியில் அரச காணிகளை அபகரிக்கும் சம்பவம் தொடர்பான இன்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மக்கள் சரமாரியான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

அப்பிரதேசத்திலுள்ள காணிகளை தனியார் காணி என கூறி அபகரிப்பவர்களிடம் விபரங்களை கேட்டு பிரச்சினை தொடர்பில் வியாழேந்திரன் ஆராய்திருந்தார். இந்த காணி அபகரிக்கும் மோசடியின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சில அரசியல்வாதிகளுக்கு 5 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேiளை நேற்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்,

மட்டக்களப்பில் அமைச்சர் ஒருவர் காணி அபகரிப்பு மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இன்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று சவுக்கடி பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஊசியை நுழைய விட்டால் உலக்கையை விடுவீர்களா காணிகள் அபகரிப்பு தொடர்பில் வியாழேந்திரன் ஆவேசம் ஊசியை நுழைய விட்டால் உலக்கையை விடுகின்ற கதையை போன்று மட்டக்களப்பில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியில் அரச காணிகளை அபகரிக்கும் சம்பவம் தொடர்பான இன்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.இதன்போது மக்கள் சரமாரியான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.அப்பிரதேசத்திலுள்ள காணிகளை தனியார் காணி என கூறி அபகரிப்பவர்களிடம் விபரங்களை கேட்டு பிரச்சினை தொடர்பில் வியாழேந்திரன் ஆராய்திருந்தார். இந்த காணி அபகரிக்கும் மோசடியின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பகுதியில் சில அரசியல்வாதிகளுக்கு 5 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மக்களிடம் தெரிவித்திருந்தார்.இதேவேiளை நேற்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்,மட்டக்களப்பில் அமைச்சர் ஒருவர் காணி அபகரிப்பு மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல்வாதிகள் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இன்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று சவுக்கடி பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement