திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாட பிரிவுகளில் பயின்று முடித்த 2241 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திரைப்பட இயக்குனர் சுந்தர் C, விஜிபி குழும தலைவர் சந்தோஷம், லைக்கா மருத்துவ குழும தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் இதில் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை குஷ்பு, இயக்குநர் மணிரத்னம், மற்றும் நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, நடிகை குஷ்புக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டத்தை சுந்தர்.சி க்கு வழங்கலாம்.
மேலும், வெளியுலகில் பிரபலமாக இருக்க கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வழங்கலாம்' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் அன்பாக இருக்க வேண்டும்.
எனது உயர்வுக்கு மூன்று ரகசியம் சொல்வேன் முதல் ரகசியம், கடுமையான உழைப்பு, இரண்டாவது ரகசியம் கடுமையான உழைப்பு, மூன்றாவது ரகசியம் கடுமையான உழைப்பு. உழைப்பு இல்லாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது என கூறினார்.
மேலும், ஜி 20 மாநாட்டில் பிரதமர் தலைமை தாங்குகிறார் என்பது பெருமையாக உள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இளம் வயது ஆளுனர் நான் தான். புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை எப்படி கையாளுவார் என விமர்சனம் செய்தனர்.
அதனை கையாண்ட பிறகு மேலும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்தார்கள்.
நான் மகப்பேறு மருத்துவர், ஒரு குழந்தை மட்டுமல்ல இரண்டு குழந்தையையும் கையாளுவேன் என என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தேன்' என தெரிவித்தார்.
இயக்குனர் சுந்தர்.C க்கு டாக்டர் பட்டம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாட பிரிவுகளில் பயின்று முடித்த 2241 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திரைப்பட இயக்குனர் சுந்தர் C, விஜிபி குழும தலைவர் சந்தோஷம், லைக்கா மருத்துவ குழும தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இதில் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை குஷ்பு, இயக்குநர் மணிரத்னம், மற்றும் நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, நடிகை குஷ்புக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டத்தை சுந்தர்.சி க்கு வழங்கலாம். மேலும், வெளியுலகில் பிரபலமாக இருக்க கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வழங்கலாம்' என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் அன்பாக இருக்க வேண்டும். எனது உயர்வுக்கு மூன்று ரகசியம் சொல்வேன் முதல் ரகசியம், கடுமையான உழைப்பு, இரண்டாவது ரகசியம் கடுமையான உழைப்பு, மூன்றாவது ரகசியம் கடுமையான உழைப்பு. உழைப்பு இல்லாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது என கூறினார்.மேலும், ஜி 20 மாநாட்டில் பிரதமர் தலைமை தாங்குகிறார் என்பது பெருமையாக உள்ளது. இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இளம் வயது ஆளுனர் நான் தான். புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை எப்படி கையாளுவார் என விமர்சனம் செய்தனர். அதனை கையாண்ட பிறகு மேலும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்தார்கள். நான் மகப்பேறு மருத்துவர், ஒரு குழந்தை மட்டுமல்ல இரண்டு குழந்தையையும் கையாளுவேன் என என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தேன்' என தெரிவித்தார்.