• Sep 17 2024

கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைப்பு...!

Sharmi / Apr 6th 2024, 4:49 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர பிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வீடமைப்பு நகர பிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் குறித்த இரு இடங்களிலும் நீர் வழங்கல் சமூக அடிப்படை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.



கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைப்பு. கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வில் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் நானோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் குறித்த இரு இடங்களிலும் நீர் வழங்கல் சமூக அடிப்படை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement