• May 03 2024

முல்லைத்தீவில் இடம்பெற்ற புதுவை பண்பாட்டுப் பெருவிழா...!

Sharmi / Apr 6th 2024, 4:28 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டுப்  பெருவிழாவானது இன்றைய தினம்(06)  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் வவுனியா பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமாரன் தலைமையில் நடைபெற்றது. 

தமிழ்ப் பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்று மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குறித்த  நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் P. S. M சாள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர்  சாய் முரளி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நா. வினோநோகராதலிங்கம் , முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு, யாழ்ப்பாண முன்னாள் மாவட்ட செயலாளரும் வடக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு தலைவருமான நா. வேதநாயகமும் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் சி.குணபாலன், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோரும்கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் புதுவை 2024 நூல் வெளியீட்டு விழாவும் , சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது

நிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்

அத்தோடு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சுயதொழில் உற்ப்பத்தியாளர்களது கண்காட்சியும் இடம்பெற்றது  

குறித்த கண்காட்சி கூடத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



முல்லைத்தீவில் இடம்பெற்ற புதுவை பண்பாட்டுப் பெருவிழா. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டுப்  பெருவிழாவானது இன்றைய தினம்(06)  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் வவுனியா பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ந.ரவீந்திரகுமாரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ப் பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்று மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.குறித்த  நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் P. S. M சாள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர்  சாய் முரளி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நா. வினோநோகராதலிங்கம் , முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு, யாழ்ப்பாண முன்னாள் மாவட்ட செயலாளரும் வடக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு தலைவருமான நா. வேதநாயகமும் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் சி.குணபாலன், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோரும்கலந்து சிறப்பித்தனர்.குறித்த நிகழ்வில் புதுவை 2024 நூல் வெளியீட்டு விழாவும் , சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுநிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்அத்தோடு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சுயதொழில் உற்ப்பத்தியாளர்களது கண்காட்சியும் இடம்பெற்றது  குறித்த கண்காட்சி கூடத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement