• May 04 2024

எஜமானை காப்பாற்ற யானைக்கு சவால் விட்ட நாய்..! இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் samugammedia

Chithra / May 29th 2023, 8:37 pm
image

Advertisement

காட்டு யானை தாக்கி உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய ஏ.எச்.எம் சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டு யானை ஒன்று வந்துள்ளது.  

நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டுள்ளார். மற்றைய நண்பர் புதரில் ஒழிந்து கொண்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால்இ நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது.  நாயைத் தாக்க முயன்ற காட்டு யானைஇ மூன்று பிள்ளைகளின் தந்தையை தாக்கியுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

எனினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்துள்ளது.  

இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எஜமானை காப்பாற்ற யானைக்கு சவால் விட்ட நாய். இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் samugammedia காட்டு யானை தாக்கி உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய ஏ.எச்.எம் சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இறந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டு யானை ஒன்று வந்துள்ளது.  நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டுள்ளார். மற்றைய நண்பர் புதரில் ஒழிந்து கொண்டுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால்இ நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது.  நாயைத் தாக்க முயன்ற காட்டு யானைஇ மூன்று பிள்ளைகளின் தந்தையை தாக்கியுள்ளது.காட்டு யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்துள்ளது.  இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement