• Sep 23 2024

பேனா அதிகாரத்தை வைத்துக்கொண்டு பேனா முனையால் எங்களை விரட்டாதீர்கள்- யாழில் முஸ்லிம்கள் இருவர் போராட்டம்...!samugamedia

Anaath / Oct 13th 2023, 6:03 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பிலும் அதற்கு அருகிலுள்ள சந்தி முழங்காவிலுக்கு உரியது என கிராம் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தமை தொடர்பிலும் குறித்த இருவரும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவிக்கையில்,  

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிகுடா கிராமத்திலிருந்து நாங்கள் சென்ற வருடத்திலிருந்து யாழ், கிளிநொச்சி முஸ்லிம்களின் இன  சுத்திகரிப்பு அடக்கு முறைகளுக்கு எதிராக கொழும்பு  ஜனாதிபதி செயலகத்திற்கு நடை பவனியை மேற்கொண்டிருந்தோம். 

ஜனாதிபதி  செயலகத்திற்கு  நாங்கள் செய்த முறைப்பாடுகளில் ஒரு சில முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.  அதிலும் பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நாச்சிகுடா கிராமத்தை மையப்படுத்தி விசாரணைகளின் அடிப்படையில் நாச்சிகுடா சந்தியில் அரை ஏக்கர் விஸ்திரத்தன்மை கொண்ட காணி ஒன்று இருக்கிறது. 

2012 ஆம் ஆண்டு இருக்கக்கூடிய வசந்தகுமார் AGA  அவர்களாலே கிராமஅபிவிருத்தி சங்கத்துக்கு அந்த காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதுக்கு பிறகு வந்த AGA, கிராம சேவகர்கள் எல்லோரும்  அது நாச்சிகுடா கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி என்று சொல்லி உறுதிப்படுத்தினார்கள். இருந்த போதிலும் இப்போதுள்ள பிரதேசசெயலாளர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொல்கிறார். அது முழங்காவில் பிரதேசத்துக்கு உரிய காணி. உங்களால் இயன்றவற்றை  நீங்கள் செய்யுங்கள். அப்படி என்று சொல்லி அதிகாரம் கட்டி விட்டு போனார். 

இதில் நாங்கள் கேட்பது என்னவென்று சொன்னால் எங்களுடைய சந்திக்குள் இருக்கிற காணி  2012 இல் லீஸ்ல தந்திருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் 2 அரை கிலோ மீற்றருக்கு அங்கால இருக்கிற முழங்காவிலுக்கு எங்களுடைய சாந்தியை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அப்படி கொடுக்கிறது என்று சொன்னாலும் எல்லை நிர்ணயம் என்று சொல்லி வரும்போது எங்களுடைய கிராமத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புகள் இதுக்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறோம். அல்லது அயல்  கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு தெரிவிக்கவேண்டும். எதுவுமே இல்லாத மாதிரி இந சுத்திகரிப்பு செய்கின்ற மாதிரி தன்னிச்சையான செயல்பாடு செய்வது ஒரு மனித நேயமான முறையா?

ஏனென்றால் ஜனாதிபதி செயலகதினூடாக ஆளுநர் அவர்களிடம் விசாரணை நடக்கும் போது ஆளுநருக்கு தெரிவிக்கிறீங்க இது வந்து நாச்சிகுடா கிராம அபிவிருத்தி சங்கத்துக்குரிய காணி அடுத்தது நாச்சிக்குடா சந்திக்குரிய காணி என்று சொல்லிப்போட்டு சொல்லுறீங்க. ஆளுநருக்கு ஒரு கதையும் அங்குள்ள மக்களுக்கு ஒரு கதையும் சொல்வது இதில்  என்ன நோக்கம் என்று எங்களுக்கு விளங்கவில்லை. 

இன்று நாங்கள் இரண்டாவது நாளாக இந்த போராட்டத்தை ஆரம்பிச்சிருக்கின்றோம். இதற்குரிய போராட்டத்தை நாங்கள் கைவிடுவதாக இல்லை. இதனை நாங்கள் உண்ணாவிரதமாக தொடரக்கூடிய நாட்களும் இருக்கிறது. 

இதுக்குரிய சரியான தீர்வு எங்களுக்கு கிடைக்க வேண்டும். எதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நாங்கள் துப்பாக்கி முனையால் நாங்கள் வெளியேற்றப்பட்ட்டோம் 90 ஆம் ஆண்டு. எல்லாம் முடிந்து சுமூகமான முறையில் அன்னியோன்னியமாக பழகும் வேளையில் தமிழ் மக்கள் ,முஸ்லீம் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பிரச்சினை இல்லாத சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்த்து கொண்டிருக்கும் போது நீங்கள் பேனா அதிகாரத்தை வைத்து கொண்டு பேனா முனையால் எங்களை வெளியேற்ற நினைப்பது எந்த விதத்திலும் ஒரு நியாயமான செயற்பாடு இல்லை. அந்த அடிப்படையில் வடமாகாணத்தில் இருக்க கூடிய தமிழ் பேசும் உறவுகள் எல்லோரிடமும் நாங்களும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். என தெரிவித்துள்ளார்.

பேனா அதிகாரத்தை வைத்துக்கொண்டு பேனா முனையால் எங்களை விரட்டாதீர்கள்- யாழில் முஸ்லிம்கள் இருவர் போராட்டம்.samugamedia கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிகுடா பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பிலும் அதற்கு அருகிலுள்ள சந்தி முழங்காவிலுக்கு உரியது என கிராம் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தமை தொடர்பிலும் குறித்த இருவரும் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவிக்கையில்,  கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட நாச்சிகுடா கிராமத்திலிருந்து நாங்கள் சென்ற வருடத்திலிருந்து யாழ், கிளிநொச்சி முஸ்லிம்களின் இன  சுத்திகரிப்பு அடக்கு முறைகளுக்கு எதிராக கொழும்பு  ஜனாதிபதி செயலகத்திற்கு நடை பவனியை மேற்கொண்டிருந்தோம். ஜனாதிபதி  செயலகத்திற்கு  நாங்கள் செய்த முறைப்பாடுகளில் ஒரு சில முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.  அதிலும் பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நாச்சிகுடா கிராமத்தை மையப்படுத்தி விசாரணைகளின் அடிப்படையில் நாச்சிகுடா சந்தியில் அரை ஏக்கர் விஸ்திரத்தன்மை கொண்ட காணி ஒன்று இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு இருக்கக்கூடிய வசந்தகுமார் AGA  அவர்களாலே கிராமஅபிவிருத்தி சங்கத்துக்கு அந்த காணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதுக்கு பிறகு வந்த AGA, கிராம சேவகர்கள் எல்லோரும்  அது நாச்சிகுடா கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி என்று சொல்லி உறுதிப்படுத்தினார்கள். இருந்த போதிலும் இப்போதுள்ள பிரதேசசெயலாளர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொல்கிறார். அது முழங்காவில் பிரதேசத்துக்கு உரிய காணி. உங்களால் இயன்றவற்றை  நீங்கள் செய்யுங்கள். அப்படி என்று சொல்லி அதிகாரம் கட்டி விட்டு போனார். இதில் நாங்கள் கேட்பது என்னவென்று சொன்னால் எங்களுடைய சந்திக்குள் இருக்கிற காணி  2012 இல் லீஸ்ல தந்திருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் 2 அரை கிலோ மீற்றருக்கு அங்கால இருக்கிற முழங்காவிலுக்கு எங்களுடைய சாந்தியை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்கிறது என்று சொன்னாலும் எல்லை நிர்ணயம் என்று சொல்லி வரும்போது எங்களுடைய கிராமத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புகள் இதுக்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறோம். அல்லது அயல்  கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு தெரிவிக்கவேண்டும். எதுவுமே இல்லாத மாதிரி இந சுத்திகரிப்பு செய்கின்ற மாதிரி தன்னிச்சையான செயல்பாடு செய்வது ஒரு மனித நேயமான முறையாஏனென்றால் ஜனாதிபதி செயலகதினூடாக ஆளுநர் அவர்களிடம் விசாரணை நடக்கும் போது ஆளுநருக்கு தெரிவிக்கிறீங்க இது வந்து நாச்சிகுடா கிராம அபிவிருத்தி சங்கத்துக்குரிய காணி அடுத்தது நாச்சிக்குடா சந்திக்குரிய காணி என்று சொல்லிப்போட்டு சொல்லுறீங்க. ஆளுநருக்கு ஒரு கதையும் அங்குள்ள மக்களுக்கு ஒரு கதையும் சொல்வது இதில்  என்ன நோக்கம் என்று எங்களுக்கு விளங்கவில்லை. இன்று நாங்கள் இரண்டாவது நாளாக இந்த போராட்டத்தை ஆரம்பிச்சிருக்கின்றோம். இதற்குரிய போராட்டத்தை நாங்கள் கைவிடுவதாக இல்லை. இதனை நாங்கள் உண்ணாவிரதமாக தொடரக்கூடிய நாட்களும் இருக்கிறது. இதுக்குரிய சரியான தீர்வு எங்களுக்கு கிடைக்க வேண்டும். எதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நாங்கள் துப்பாக்கி முனையால் நாங்கள் வெளியேற்றப்பட்ட்டோம் 90 ஆம் ஆண்டு. எல்லாம் முடிந்து சுமூகமான முறையில் அன்னியோன்னியமாக பழகும் வேளையில் தமிழ் மக்கள் ,முஸ்லீம் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பிரச்சினை இல்லாத சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்த்து கொண்டிருக்கும் போது நீங்கள் பேனா அதிகாரத்தை வைத்து கொண்டு பேனா முனையால் எங்களை வெளியேற்ற நினைப்பது எந்த விதத்திலும் ஒரு நியாயமான செயற்பாடு இல்லை. அந்த அடிப்படையில் வடமாகாணத்தில் இருக்க கூடிய தமிழ் பேசும் உறவுகள் எல்லோரிடமும் நாங்களும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement