• Jan 08 2025

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் - அநுர அரசிடம் ராகுல தேரர் இடித்துரைப்பு

Tharmini / Jan 7th 2025, 5:00 pm
image

வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது. இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.

இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் சிறு பிரச்சினை இருப்பதாக உணரமுடிகின்றது. அங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை வழங்கவும். இலங்கை என்பது சுயாதீன நாடு. நாம் இந்தியாவின் கைப்பாவையாகவும் மாறக்கூடாது. வெளிநாட்டுத் தொடர்புகள் அவசியம். அதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதாக மாற்ற வேண்டும்.

வெளிநாட்டுத் தூதரக சேவைகளில் உள்ளவர்கள் மாற்றப்பட வேண்டும். சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்களை நியமிக்க வேண்டும்.” – என்றார்.

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் - அநுர அரசிடம் ராகுல தேரர் இடித்துரைப்பு வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது. இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் சிறு பிரச்சினை இருப்பதாக உணரமுடிகின்றது. அங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை வழங்கவும். இலங்கை என்பது சுயாதீன நாடு. நாம் இந்தியாவின் கைப்பாவையாகவும் மாறக்கூடாது. வெளிநாட்டுத் தொடர்புகள் அவசியம். அதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதாக மாற்ற வேண்டும்.வெளிநாட்டுத் தூதரக சேவைகளில் உள்ளவர்கள் மாற்றப்பட வேண்டும். சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்களை நியமிக்க வேண்டும்.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement