• Mar 29 2024

ஃபேஸ் வாஷை பயன்படுத்தும் போது இந்த தவறை பண்ணாதிங்க!

Tamil nila / Dec 15th 2022, 2:46 pm
image

Advertisement

எப்பொழுதும்  ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும்.  முகத்தில் ஈரப்பசை இல்லாமல்  ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.  


முன்னரெல்லாம் உடம்பிற்கும், முகத்திற்கும் சோப்புகளை மட்டுமே உபயோகப்படுத்தி வந்தோம்.  ஆனால் இப்போது முகத்திற்கு சில ஃபேஸ் வாஷ்களை தான் பயன்படுத்துகிறோம் ஏனெனில் சோப்பிலுள்ள பிஹெச் அளவு நமது முகத்திற்கு ஏற்றதல்ல.  முகத்திலுள்ள அழுக்குகளை போக்கவும், இறந்த செல்களை நீக்கவும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை போக்கவும் நாம் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துகிறோம். 


ஒவ்வொருவரும் அவரது சருமத்திற்கு ஏற்ற வகையிலான ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துகின்றனர்.  ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது, அதனை பின்பற்றி நாம் முகம் கழுவ வேண்டும் இல்லையென்றால் சில பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.  இப்போது எப்படி  ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.


1) எப்பொழுதும்  ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும்.  முகத்தில் ஈரப்பசை இல்லாமல்  ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.


2) குறைவான அளவு மற்றும் அதிகமான அளவு  ஃபேஸ் வாஷ் க்ரீம்களை எடுக்கக்கூடாது, மிதமான அளவில் மட்டுமே க்ரீம்களை எடுத்து பயன்படுத்த வேண்டும்.  சரியான அளவில் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தாவிட்டால் உங்கள் சருமம் வறண்டுவிடும் மற்றும் உங்கள் ஃபேஸ் வாஷும் சீக்கிரமே தீர்ந்துவிடும்.


3) முகத்தில் அதிகளவு பருக்களை கொண்டவர்கள் அல்லது எண்ணெய் வழியும் சருமத்தை கொண்டவர்கள் ஃபேஸ் வாஷ் க்ரீமை பயன்படுத்திய உடனேயே முகத்தை கழுவிவிடக்கூடாது.  குறைந்தது இரண்டு நிமிடங்களாவது முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்த பின்னரே கழுவ வேண்டும்.


4) முகத்தை கழுவிய பின்னர் அழுத்தமான துண்டை வைத்து துடைக்கக்கூடாது, லேசான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.  அதுவும் முகத்தை அழுத்தி துடைக்காமல் லேசாக முகத்திலுள்ள ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும்.


5) முகத்தை கழுவிய உடன் மாய்ஸ்ச்சரைசர் தடவ வேண்டியது அவசியம், இது உங்கள் சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.  ரெட்டினால் அல்லது சாலிசிலிக் அமிலம் கலந்த  ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துபவர்கள் முகத்திலுள்ள ஈரம் காயும் வரை காத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.





ஃபேஸ் வாஷை பயன்படுத்தும் போது இந்த தவறை பண்ணாதிங்க எப்பொழுதும்  ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும்.  முகத்தில் ஈரப்பசை இல்லாமல்  ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.  முன்னரெல்லாம் உடம்பிற்கும், முகத்திற்கும் சோப்புகளை மட்டுமே உபயோகப்படுத்தி வந்தோம்.  ஆனால் இப்போது முகத்திற்கு சில ஃபேஸ் வாஷ்களை தான் பயன்படுத்துகிறோம் ஏனெனில் சோப்பிலுள்ள பிஹெச் அளவு நமது முகத்திற்கு ஏற்றதல்ல.  முகத்திலுள்ள அழுக்குகளை போக்கவும், இறந்த செல்களை நீக்கவும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை போக்கவும் நாம் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவரும் அவரது சருமத்திற்கு ஏற்ற வகையிலான ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துகின்றனர்.  ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது, அதனை பின்பற்றி நாம் முகம் கழுவ வேண்டும் இல்லையென்றால் சில பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.  இப்போது எப்படி  ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.1) எப்பொழுதும்  ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும்.  முகத்தில் ஈரப்பசை இல்லாமல்  ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.2) குறைவான அளவு மற்றும் அதிகமான அளவு  ஃபேஸ் வாஷ் க்ரீம்களை எடுக்கக்கூடாது, மிதமான அளவில் மட்டுமே க்ரீம்களை எடுத்து பயன்படுத்த வேண்டும்.  சரியான அளவில் ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தாவிட்டால் உங்கள் சருமம் வறண்டுவிடும் மற்றும் உங்கள் ஃபேஸ் வாஷும் சீக்கிரமே தீர்ந்துவிடும்.3) முகத்தில் அதிகளவு பருக்களை கொண்டவர்கள் அல்லது எண்ணெய் வழியும் சருமத்தை கொண்டவர்கள் ஃபேஸ் வாஷ் க்ரீமை பயன்படுத்திய உடனேயே முகத்தை கழுவிவிடக்கூடாது.  குறைந்தது இரண்டு நிமிடங்களாவது முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்த பின்னரே கழுவ வேண்டும்.4) முகத்தை கழுவிய பின்னர் அழுத்தமான துண்டை வைத்து துடைக்கக்கூடாது, லேசான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.  அதுவும் முகத்தை அழுத்தி துடைக்காமல் லேசாக முகத்திலுள்ள ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும்.5) முகத்தை கழுவிய உடன் மாய்ஸ்ச்சரைசர் தடவ வேண்டியது அவசியம், இது உங்கள் சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.  ரெட்டினால் அல்லது சாலிசிலிக் அமிலம் கலந்த  ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துபவர்கள் முகத்திலுள்ள ஈரம் காயும் வரை காத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement