• May 14 2025

ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் டி.ஜே. இசை உள்ளிட்ட களியாட்டங்களை தவிர்க்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்

Thansita / May 14th 2025, 5:51 pm
image

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை சுமார் 60 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்  மீண்டும் ப்ரீமியர் லீக் தொடங்கும் போது,

எஞ்சியுள்ள ஏனைய  போட்டிகளில் டி.ஜே. இசை உள்ளிட்ட களியாட்டங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 எனினும் இன்னும் 16 போட்டிகள் எஞ்சியுள்ளதுடன், இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளை இசை இல்லாமலும், சியர் லீடர்ஸ் இல்லாமலும் நடத்த வேண்டும். 

ஏனெனில், இந்தியாவில் அண்மையில் சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

 இந்நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் சோகத்தில் இருப்பதால் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் டி.ஜே. இசை உள்ளிட்ட களியாட்டங்களை தவிர்க்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை சுமார் 60 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில்  மீண்டும் ப்ரீமியர் லீக் தொடங்கும் போது, எஞ்சியுள்ள ஏனைய  போட்டிகளில் டி.ஜே. இசை உள்ளிட்ட களியாட்டங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  எனினும் இன்னும் 16 போட்டிகள் எஞ்சியுள்ளதுடன், இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளை இசை இல்லாமலும், சியர் லீடர்ஸ் இல்லாமலும் நடத்த வேண்டும்.  ஏனெனில், இந்தியாவில் அண்மையில் சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  இந்நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் சோகத்தில் இருப்பதால் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement