இந்தியாவின் கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள துயரச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இத்திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்டுள்ளமையால் நெரிசலுக்குள்ளாகிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதையடுத்து, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டனர். இவர்களை வைத்தியசாலையில் நேரில் சந்தித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார்.
கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை .எனினும், இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதிகளவில் மக்கள் திரண்டதாலேயே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரில் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறியுள்ளார்.
லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
தீ மிதிக்கும் சடங்கில் பக்தர்கள் ஈடுபடுவார்கள்.இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவுக்காக கோவா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வருவது வழக்கம்.இதனால் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
திருவிழாவிற்கு சென்ற பக்தர்கள், பலியாகிய சோகம்-நடந்தது என்ன இந்தியாவின் கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள துயரச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்டுள்ளமையால் நெரிசலுக்குள்ளாகிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇதையடுத்து, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டனர். இவர்களை வைத்தியசாலையில் நேரில் சந்தித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார். கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவலை இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை .எனினும், இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.அதிகளவில் மக்கள் திரண்டதாலேயே இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரில் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறியுள்ளார்.லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தீ மிதிக்கும் சடங்கில் பக்தர்கள் ஈடுபடுவார்கள்.இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவுக்காக கோவா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வருவது வழக்கம்.இதனால் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.