• May 03 2024

அழகைத் தேடிப்போய் ஆபத்தில் சிக்க வேண்டாம்- ஆய்வில் வெளியான தகவல்..!!

Tamil nila / Apr 21st 2024, 9:07 pm
image

Advertisement

சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரையில் அனைவரும் முகத்தை பொலிவுடனும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதிகளவான முகப்பொலிவு க்ரீம்களை (Fairness Cream) முகத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த க்ரீம்கள் உங்கள் முகத்தின் பொலிவை அதிகப்படுத்துவதோடு நிற்காமல் சிறுநீரக பிரச்சினையையும் ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறான க்ரீம்களில் இருக்கும் அதிகளவான பாதரசமானது, சிறுநீரக சுத்திகரிப்பானில் பாதிப்பை ஏற்படுத்தி புரத கசிவுக்கு காரணமாக இருக்கிறது. இது அதிகமாகும் பட்சத்தில் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

அத்தோடு 'மெம்பரேனஸ் நெப்ரோபதி' எனும் சிறுநீரக கோளாறும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குறித்த ஆய்வில் பங்குபற்றியவர்களில் 22 நபர்கள் மெம்பரேனஸ் நெப்ரோபதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததோடு, இதில் 15 பேர் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு சுமார் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே க்ரீம்களை உபயோகித்து வந்துள்ளனர்.

இந்த நோய்க்கான அறிகுறிகளாக, மிதமான நீர்க்கட்டு, உடல் சோர்வு, சிறுநீரில் அதிகப்படியான நுறை வெளியேறுவது போன்றன காணப்படுகின்றன.

க்ரீம்களில் உள்ள ஹைட்ரோகுயினோன் சருமத்தில் வறட்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்துவதோடு, தோல் சிவந்து போகவும் வாய்ப்புள்ளது. இத்தோடு தலைவலி, களைப்பு, உடல் எடை குறைதல் போன்றனவும் ஏற்படும்.

மேலும் தொடர்ச்சியாக நாம் இவ்வாறான க்ரீம்களை பயன்படுத்தும்போது நமது தோல் மெலிந்து பலவீனமடைவதோடு எளிதாக தொற்றுக்களும் தாக்கும்.

குறிப்பாக, பாலூட்டும் தாய்மார்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்தவே கூடாது. எனவே அதிகளவான அழகைத் தேடி இருக்கும் அழகையும் இழந்துவிட வேண்டாம்.

அழகைத் தேடிப்போய் ஆபத்தில் சிக்க வேண்டாம்- ஆய்வில் வெளியான தகவல். சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரையில் அனைவரும் முகத்தை பொலிவுடனும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதிகளவான முகப்பொலிவு க்ரீம்களை (Fairness Cream) முகத்துக்கு பயன்படுத்துகின்றனர்.இந்த க்ரீம்கள் உங்கள் முகத்தின் பொலிவை அதிகப்படுத்துவதோடு நிற்காமல் சிறுநீரக பிரச்சினையையும் ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.இவ்வாறான க்ரீம்களில் இருக்கும் அதிகளவான பாதரசமானது, சிறுநீரக சுத்திகரிப்பானில் பாதிப்பை ஏற்படுத்தி புரத கசிவுக்கு காரணமாக இருக்கிறது. இது அதிகமாகும் பட்சத்தில் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.அத்தோடு 'மெம்பரேனஸ் நெப்ரோபதி' எனும் சிறுநீரக கோளாறும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.குறித்த ஆய்வில் பங்குபற்றியவர்களில் 22 நபர்கள் மெம்பரேனஸ் நெப்ரோபதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததோடு, இதில் 15 பேர் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு சுமார் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே க்ரீம்களை உபயோகித்து வந்துள்ளனர்.இந்த நோய்க்கான அறிகுறிகளாக, மிதமான நீர்க்கட்டு, உடல் சோர்வு, சிறுநீரில் அதிகப்படியான நுறை வெளியேறுவது போன்றன காணப்படுகின்றன.க்ரீம்களில் உள்ள ஹைட்ரோகுயினோன் சருமத்தில் வறட்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்துவதோடு, தோல் சிவந்து போகவும் வாய்ப்புள்ளது. இத்தோடு தலைவலி, களைப்பு, உடல் எடை குறைதல் போன்றனவும் ஏற்படும்.மேலும் தொடர்ச்சியாக நாம் இவ்வாறான க்ரீம்களை பயன்படுத்தும்போது நமது தோல் மெலிந்து பலவீனமடைவதோடு எளிதாக தொற்றுக்களும் தாக்கும்.குறிப்பாக, பாலூட்டும் தாய்மார்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்தவே கூடாது. எனவே அதிகளவான அழகைத் தேடி இருக்கும் அழகையும் இழந்துவிட வேண்டாம்.

Advertisement

Advertisement

Advertisement