• Nov 23 2024

அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ், முஸ்லிம் சமூகங்களை பலியாக்க வேண்டாம்...! ஏ.சி. யஹியாகான் வலியுறுத்து...!

Sharmi / Jun 19th 2024, 3:46 pm
image

பாராளுமன்ற அரசியலுக்காக   தமிழ், முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் தேசிய பட்டியல் எம்.பி தவராசா கலையரசனின்  செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கலையரசன் எம்.பியின் துவேஷ கருத்துக்கள்  இன,மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாக சுட்டிக்காட்டி யஹியாகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப் பட்டியல் எனும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்துள்ள கலையரசன், மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் நுழைய இரு சமுகங்களையும் பிரித்தாளும் கைங்கரியத்தை முன்னெடுத்து வருகின்றார்.

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள கலையரசன் எம்பி, தமிழ், முஸ்லிம் மோதலை தூண்டிவிட எடுத்த முயற்சியை தமிழ் மக்களே முன்னின்று தகர்த்தெறிந்தமை கடந்தகால வரலாறு.

அதாவது , கடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கினர்.

கருணா வந்ததால்தான் - அம்பாறை  மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோனது என்று நொண்டிச்சாட்டைக் கூறினாலும், கலையரசனின் துவேஷ கருத்துக்களே அவரை தோற்கடிக்க வைத்தது என்ற உண்மையை தமிழ் மக்களே இன்று பகிரங்கமாக கூற முனைந்துள்ளனர்.

இதேபோல்தான் , அம்பாறை மாவட்ட எம்.பியாக இருந்த கோடீஸ்வரனுக்கும் ஏற்பட்டது என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ் - முஸ்லிம் சமுகம் என்றும்போல் இன்றும் இரண்டரக் கலந்து நட்புப் பாராட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இதனை குழப்பியடிப்பது இந்த கலையரசன் மற்றும் கோடீஸ்வரனைப் போன்றவர்கள்தான்.

வெளி மாவட்டங்களில் இருந்து இறக்ப்படும் சில இளைஞர்களைக் கொண்டு - துவேஷத்தை விதைத்து அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த கலையரசன் முனைவதை தமிழ் மக்கள் அறியாமலில்லை. இதற்கான தகுந்த பாடம் அடுதத பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என்பதை அவர் புரிந்து வேண்டும்.

எந்தவொரு விடயத்திலும் தீர்வு எட்டப்படும் போது - அது தமிழ் சமுகத்தையும் பாதிக்காத வகையில் எட்டப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பும் முடிவுமாகும் என்பதை இங்கு கோடிட்டுக் காட்டி , அற்பத்தனமான அரசியலுக்காக இரு இனங்களையும் மோதவிட துடிக்கும் கைங்கரியத்தை கலையரசன் கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அரசியல் இருப்பை தக்கவைக்க தமிழ், முஸ்லிம் சமூகங்களை பலியாக்க வேண்டாம். ஏ.சி. யஹியாகான் வலியுறுத்து. பாராளுமன்ற அரசியலுக்காக   தமிழ், முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எத்தனிக்கும் தேசிய பட்டியல் எம்.பி தவராசா கலையரசனின்  செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் கலையரசன் எம்.பியின் துவேஷ கருத்துக்கள்  இன,மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாக சுட்டிக்காட்டி யஹியாகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப் பட்டியல் எனும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்துள்ள கலையரசன், மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் நுழைய இரு சமுகங்களையும் பிரித்தாளும் கைங்கரியத்தை முன்னெடுத்து வருகின்றார்.அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள கலையரசன் எம்பி, தமிழ், முஸ்லிம் மோதலை தூண்டிவிட எடுத்த முயற்சியை தமிழ் மக்களே முன்னின்று தகர்த்தெறிந்தமை கடந்தகால வரலாறு. அதாவது , கடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கினர்.கருணா வந்ததால்தான் - அம்பாறை  மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோனது என்று நொண்டிச்சாட்டைக் கூறினாலும், கலையரசனின் துவேஷ கருத்துக்களே அவரை தோற்கடிக்க வைத்தது என்ற உண்மையை தமிழ் மக்களே இன்று பகிரங்கமாக கூற முனைந்துள்ளனர்.இதேபோல்தான் , அம்பாறை மாவட்ட எம்.பியாக இருந்த கோடீஸ்வரனுக்கும் ஏற்பட்டது என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.தமிழ் - முஸ்லிம் சமுகம் என்றும்போல் இன்றும் இரண்டரக் கலந்து நட்புப் பாராட்டி வாழ்ந்து வருகின்றனர். இதனை குழப்பியடிப்பது இந்த கலையரசன் மற்றும் கோடீஸ்வரனைப் போன்றவர்கள்தான்.வெளி மாவட்டங்களில் இருந்து இறக்கப்படும் சில இளைஞர்களைக் கொண்டு - துவேஷத்தை விதைத்து அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த கலையரசன் முனைவதை தமிழ் மக்கள் அறியாமலில்லை. இதற்கான தகுந்த பாடம் அடுதத பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் என்பதை அவர் புரிந்து வேண்டும்.எந்தவொரு விடயத்திலும் தீர்வு எட்டப்படும் போது - அது தமிழ் சமுகத்தையும் பாதிக்காத வகையில் எட்டப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பும் முடிவுமாகும் என்பதை இங்கு கோடிட்டுக் காட்டி , அற்பத்தனமான அரசியலுக்காக இரு இனங்களையும் மோதவிட துடிக்கும் கைங்கரியத்தை கலையரசன் கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement