• Feb 07 2025

மாணவர்களை அனுப்ப வேண்டாம்! குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Chithra / Feb 7th 2025, 5:07 pm
image



கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றனர்.

இதனால் அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன்படி, அந்தக் மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலகத்திற்கு வந்து அழுது புலம்புவதாகவும் தெரியவந்துள்ளது.

இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து, சங்கடமானவர்களாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


மாணவர்களை அனுப்ப வேண்டாம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றனர்.இதனால் அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.அதன்படி, அந்தக் மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலகத்திற்கு வந்து அழுது புலம்புவதாகவும் தெரியவந்துள்ளது.இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து, சங்கடமானவர்களாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement