• May 21 2024

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளக்கூடாது! மஹிந்த samugammedia

Chithra / Nov 21st 2023, 4:40 pm
image

Advertisement

 

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

இன்று நாடாளுமன்றில் கதைக்கும் பலர், அவர்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம், நாட்டுக்கு பரிந்துரைகளை விதித்துள்ளது. இவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

மக்களுக்குத் தேவையான நாட்டை நாம் உருவாக்க வேண்டுமே ஒழிய, எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது.

எதிர்ப்பினை வெளியிடும் தரப்பினர், அன்று சவாலை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்பதை நாமும் அறிந்துக் கொண்டுள்ளோம்.

இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டையே இந்த வரவு – செலவுத்திட்டம் முன்வைத்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளக்கூடாது மஹிந்த samugammedia  எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,இன்று நாடாளுமன்றில் கதைக்கும் பலர், அவர்களது ஆட்சிக் காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சர்வதேச நாணய நிதியம், நாட்டுக்கு பரிந்துரைகளை விதித்துள்ளது. இவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.மக்களுக்குத் தேவையான நாட்டை நாம் உருவாக்க வேண்டுமே ஒழிய, எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது.எதிர்ப்பினை வெளியிடும் தரப்பினர், அன்று சவாலை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்பதை நாமும் அறிந்துக் கொண்டுள்ளோம்.இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டையே இந்த வரவு – செலவுத்திட்டம் முன்வைத்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement