• Apr 04 2025

மின்கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து - சாரதி படுகாயம்

Chithra / Apr 3rd 2025, 2:19 pm
image


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்தி அருகில்  வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் வாகனமொன்று மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (3) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்பலாங்கொடை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு சென்ற நிலையில் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கம் காரணமாக வீதியை  விட்டு விலகி வாகனம் அருகில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது 41 வயது மதிக்கத்தக்க சாரதி காயமடைந்து சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வாகனம் உட்பட மின்கம்பம் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


மின்கம்பத்துடன் மோதி வாகனம் விபத்து - சாரதி படுகாயம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்தி அருகில்  வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் வாகனமொன்று மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று (3) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அம்பலாங்கொடை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு சென்ற நிலையில் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கம் காரணமாக வீதியை  விட்டு விலகி வாகனம் அருகில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது 41 வயது மதிக்கத்தக்க சாரதி காயமடைந்து சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வாகனம் உட்பட மின்கம்பம் சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement