• Apr 04 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குதிக்கும் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து

Chithra / Apr 3rd 2025, 2:15 pm
image


இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார்.

தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உவிந்து விஜேவீர மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்கின்றோம். இதற்காக எதிர்வரும் காலங்களில் எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் எடுப்போம்.

ஏனென்றால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியம் என நாம் நம்புகின்றோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாம் பாரிய மாற்றங்களை கண்டோம்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான கட்சிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த கால அரசியலில் இடம்பெற்ற போலி வாக்குறுதிகள் மற்றும் திருப்தியற்ற செயற்பாடுகள் குறித்து மக்கள் அனைவரும் நன்கு சிந்தித்து புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த பின்னணியில் இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என உவிந்து விஜேவீர மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குதிக்கும் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார்.தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.உவிந்து விஜேவீர மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.இது குறித்து நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்கின்றோம். இதற்காக எதிர்வரும் காலங்களில் எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் எடுப்போம்.ஏனென்றால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியம் என நாம் நம்புகின்றோம்.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாம் பாரிய மாற்றங்களை கண்டோம்.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான கட்சிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.கடந்த கால அரசியலில் இடம்பெற்ற போலி வாக்குறுதிகள் மற்றும் திருப்தியற்ற செயற்பாடுகள் குறித்து மக்கள் அனைவரும் நன்கு சிந்தித்து புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.தற்போது அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த பின்னணியில் இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என உவிந்து விஜேவீர மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement