• May 23 2026

போதையற்ற இளைஞர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - யாழில் விழிப்புணர்வு பேரணி!

shanu / May 23rd 2026, 4:38 pm
image

போதையற்ற இளைஞர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - யாழில் விழிப்புணர்வு பேரணி! 

  


இன்றைய இளைஞர்கள் சிறந்த வலுவுடையவர்கள். ஆகவே போதையற்ற நிலையில் அவர்கள் செயற்பட்டால் நாட்டை அவர்களால் மட்டுமே சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் என யாழ்.போதன வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. 


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண பிரதி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக முனியப்பர் கோவில் முன்றலில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.


அதனை தொடர்ந்து போதை விழிப்புணர்வு நடைபவனி முனியப்பர் கோவிலடியிலிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் வரை சென்று நிறைவடைந்தது. 


இதில் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் சந்திரசேகர், யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் கபிலன், இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

போதையற்ற இளைஞர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - யாழில் விழிப்புணர்வு பேரணி போதையற்ற இளைஞர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - யாழில் விழிப்புணர்வு பேரணி   இன்றைய இளைஞர்கள் சிறந்த வலுவுடையவர்கள். ஆகவே போதையற்ற நிலையில் அவர்கள் செயற்பட்டால் நாட்டை அவர்களால் மட்டுமே சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் என யாழ்.போதன வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண பிரதி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக முனியப்பர் கோவில் முன்றலில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து போதை விழிப்புணர்வு நடைபவனி முனியப்பர் கோவிலடியிலிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் சந்திரசேகர், யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் கபிலன், இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement