• Jan 11 2025

என்னதான் பிரசாரம் செய்தாலும் துமிந்த சில்வாவிற்கு விடுதலை கிடையாது! அடித்துக் கூறுகிறது அநுர அரசு

Chithra / Jan 10th 2025, 8:36 am
image

 

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு ஒருபோதும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கமாட்டார் என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதி நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். அவருக்கு சார்பான தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு 2021 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய சர்ச்சைக்குரிய பொது மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

என்னதான் பிரசாரம் செய்தாலும் துமிந்த சில்வாவிற்கு விடுதலை கிடையாது அடித்துக் கூறுகிறது அநுர அரசு  2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு ஒருபோதும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கமாட்டார் என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார்.நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதி நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். அவருக்கு சார்பான தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது.சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு 2021 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய சர்ச்சைக்குரிய பொது மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement