• May 29 2025

மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் துமிந்த திசாநாயக்க!

Chithra / May 28th 2025, 12:55 pm
image


விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட துமிந்த, விசேட வைத்தியரின் பரிசோதனையின் பின்னர் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இருந்த பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை  மே மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, சுகயீனம் காரணமாக கடந்த 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் துமிந்த திசாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.நீதிமன்ற உத்தரவின் பேரில் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட துமிந்த, விசேட வைத்தியரின் பரிசோதனையின் பின்னர் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இருந்த பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை  மே மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, சுகயீனம் காரணமாக கடந்த 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement