தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த மகிழுந்தை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு துசித ஹல்லொலுவ மகிழுந்தொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்து வழிமறித்த இருவர் அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹல்லொலுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- மேலும் மூவர் கைது. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த மகிழுந்தை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு துசித ஹல்லொலுவ மகிழுந்தொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்து வழிமறித்த இருவர் அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.