• Nov 26 2024

“துயர் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” - நூல் வெளியீடு

Anaath / Sep 20th 2024, 6:32 pm
image

இலங்கையில் கடந்த  1995  யூலை 09 ம் திகதி விமானப்படையின்  குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட 153 தமிழ் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

இந்த படுகொலையை  ஆவணமாக்கும் முயற்சியில் ஈழத்தின்  எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட  வல்வை  ஆனந்தராஜினால்   எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” எனும்  வரலாற்று ஆவணநூல் லண்டன்  குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடத்தில் நேற்று 19 ஆம் திகதி நடைபெற்றது 

ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையை  ஆசிரியர் கந்தையா  பாலகிருஸ்ணனும் வெளியீட்டு உரையை திருமகாலிங்கம் சுதாகரனும்  நிகழ்த்தினர் . 

தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன், சிவசிறிராம்  வாகீசக்குருக்கள் , அரசியல் இராணுவ ஆய்வாளர் கலாநிதி பிரபாகரன்  , வைத்திய கலாநிதி திருமதி இந்துமதி ஆகியோர்  வழங்கினார்கள் .

இறுதியாக நூலின் ஏற்புரையை ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பணிப்பாளரும் நூலாசிரியருமான வல்வை ஆனந்தராஜ்  வழங்கினார் .

இந்த நிகழ்வில்  தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் , மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

“துயர் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” - நூல் வெளியீடு இலங்கையில் கடந்த  1995  யூலை 09 ம் திகதி விமானப்படையின்  குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட 153 தமிழ் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலையை  ஆவணமாக்கும் முயற்சியில் ஈழத்தின்  எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட  வல்வை  ஆனந்தராஜினால்   எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” எனும்  வரலாற்று ஆவணநூல் லண்டன்  குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடத்தில் நேற்று 19 ஆம் திகதி நடைபெற்றது ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையை  ஆசிரியர் கந்தையா  பாலகிருஸ்ணனும் வெளியீட்டு உரையை திருமகாலிங்கம் சுதாகரனும்  நிகழ்த்தினர் . தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன், சிவசிறிராம்  வாகீசக்குருக்கள் , அரசியல் இராணுவ ஆய்வாளர் கலாநிதி பிரபாகரன்  , வைத்திய கலாநிதி திருமதி இந்துமதி ஆகியோர்  வழங்கினார்கள் .இறுதியாக நூலின் ஏற்புரையை ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பணிப்பாளரும் நூலாசிரியருமான வல்வை ஆனந்தராஜ்  வழங்கினார் .இந்த நிகழ்வில்  தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் , மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

Advertisement

Advertisement

Advertisement