கடந்த 8 வருடங்களாக, மக்கள் உள்ளே சென்று வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, தடை செய்யப்பட்டிருந்த , திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, நேற்றையதினம்(02) விஜயமொன்றை மேற்கொண்டார்.
கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் அப் பிரதேச பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து, ஆளுநரின் வருகை இடம்பெற்றிருந்தது.
இதன் போது ஆளுநருக்கும் அந்த பிரதேச பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றது
இந்தச் சந்திப்பில், கருமலையூற்று பள்ளிவாயிலை, வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரத்தை உரிய தரப்பினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொண்டு சென்று, திருப்திகரமான பெறுபேறு கிடைப்பதற்கு முயற்சி செய்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் M.E M. றாபிக் மற்றும் தேசிய மக்கள் சக்தி மூதூர் பிரதேச செயற்பாட்டாளர் எம். சப்ரான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருமலை கருமலையூற்று பள்ளிவாயலுக்கு கிழக்கு ஆளுநர் விஜயம். கடந்த 8 வருடங்களாக, மக்கள் உள்ளே சென்று வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, தடை செய்யப்பட்டிருந்த , திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, நேற்றையதினம்(02) விஜயமொன்றை மேற்கொண்டார்.கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் அப் பிரதேச பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து, ஆளுநரின் வருகை இடம்பெற்றிருந்தது.இதன் போது ஆளுநருக்கும் அந்த பிரதேச பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றதுஇந்தச் சந்திப்பில், கருமலையூற்று பள்ளிவாயிலை, வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.இந்த விவகாரத்தை உரிய தரப்பினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொண்டு சென்று, திருப்திகரமான பெறுபேறு கிடைப்பதற்கு முயற்சி செய்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் M.E M. றாபிக் மற்றும் தேசிய மக்கள் சக்தி மூதூர் பிரதேச செயற்பாட்டாளர் எம். சப்ரான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.