• May 17 2024

இந்த உணவுகளை நைட் சாப்பிட்டா மோசமான கனவுகள் வருமாம்..!

Chithra / Dec 3rd 2022, 5:11 pm
image

Advertisement

நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உங்கள் சருமம், முடி மற்றும் தூக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சில நேரங்களில் நீங்கள் உட்கொள்ளும் சில ஆரோக்கியமான உணவுகள் கூட, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் தான், ஆயுர்வேதம் முதல் நவீன மருத்துவ அறிவியல் வரை ஒவ்வொருவரும் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பரிந்துரைக்கின்றனர். 

உணவு பழக்கத்தை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.

ஆனால், தூக்கமின்மை உங்கள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு நீங்கள் உட்கொள்ளும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். ஆம், தூக்கமின்மை மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்தும் சில உணவுகளை பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சீஸ்


பாலாடைக்கட்டியில் டிரிப்டோபான் நிறைந்துள்ளது, இது தூக்கத்தைத் தூண்டும் செரோடோனின் ஹார்மோனுக்கு முன்னோடியாக செயல்படுகிறது. ஆய்வுகளின்படி, இது பெரும்பாலும் தூக்கத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்துகிறது மற்றும் கெட்ட கனவுகளை ஏற்படுத்துகிறது. ஆதலால், ஸ்டில்டன் சீஸ் மிகவும் மோசமானது, இரவில் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சூடான சாஸ்


சூடான சாஸ்களின் அதிகப்படியான நுகர்வு பெரும்பாலும் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது REM (விரைவான கண் இயக்கம்) தூக்கத்தின் போது கனவு உருவாவதை மேலும் மாற்றுகிறது மற்றும் கெட்ட கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், நீங்கள் நிம்மதியான நல்ல உறக்கத்தை பெற முடியாது.

பாஸ்தா


ரொட்டி மற்றும் பாஸ்தாவில் மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் குளுக்கோஸாக மாறுகின்றன. சர்க்கரை உணவுகளும் அதே விளைவுகளை உங்கள் உடலில் ஏற்படுத்துகின்றன. இது ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்துகின்றன.

சாக்லேட்


சாக்லேட்டில் காஃபின் நிறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் திறனைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியின்மை மற்றும் கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியடையாலாம்.

சிப்ஸ்


ஃபிரான்டியர்ஸ் ஆஃப் சைக்காலஜியின் ஆய்வின்படி, சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், ஜீரணிக்க நேரம் எடுக்கும், மேலும் இரவில் அவற்றை சாப்பிடுவது அமைதியின்மை மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் பயங்கராமன கெட்ட கனவுகளையும் ஏற்படுத்துகிறது. இதனால், உங்களால் நிம்மதியான தூங்க முடியாது.

சூடான கோகோ


இது சர்க்கரை, பால் மற்றும் கோகோ பவுடரைப் பயன்படுத்தி தாயாரிக்கப்பட்ட உணவாகும். இதை சாப்பிடும்போது, அடிக்கடி உடலை உடனடியாக சூடாக்குகிறது. இரவில் இந்த உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக உங்க இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது.

தயிர்


ஆயுர்வேதத்தின்படி, இரவில் தயிர் உட்கொள்வது சளி உருவாவதற்கு வழிவகுக்கிறது. சுவாச அமைப்பு முறையைத் தடுக்கிறது, மூளைக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. மேலும் அமைதியின்மை மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், உங்கள் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.

சோடா


சோடாவில் சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளடக்கம் நிறைந்துள்ளது, இது தூக்கத்தின் போது கூட மூளையை நேரடியாக தூண்டுகிறது மற்றும் விரும்பத்தகாத கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

இந்த உணவுகளை நைட் சாப்பிட்டா மோசமான கனவுகள் வருமாம். நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உங்கள் சருமம், முடி மற்றும் தூக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ஆம், சில நேரங்களில் நீங்கள் உட்கொள்ளும் சில ஆரோக்கியமான உணவுகள் கூட, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் தான், ஆயுர்வேதம் முதல் நவீன மருத்துவ அறிவியல் வரை ஒவ்வொருவரும் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பரிந்துரைக்கின்றனர். உணவு பழக்கத்தை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.ஆனால், தூக்கமின்மை உங்கள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு நீங்கள் உட்கொள்ளும் உணவுகளும் காரணமாக இருக்கலாம். ஆம், தூக்கமின்மை மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்தும் சில உணவுகளை பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.சீஸ்பாலாடைக்கட்டியில் டிரிப்டோபான் நிறைந்துள்ளது, இது தூக்கத்தைத் தூண்டும் செரோடோனின் ஹார்மோனுக்கு முன்னோடியாக செயல்படுகிறது. ஆய்வுகளின்படி, இது பெரும்பாலும் தூக்கத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்துகிறது மற்றும் கெட்ட கனவுகளை ஏற்படுத்துகிறது. ஆதலால், ஸ்டில்டன் சீஸ் மிகவும் மோசமானது, இரவில் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.சூடான சாஸ்சூடான சாஸ்களின் அதிகப்படியான நுகர்வு பெரும்பாலும் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது REM (விரைவான கண் இயக்கம்) தூக்கத்தின் போது கனவு உருவாவதை மேலும் மாற்றுகிறது மற்றும் கெட்ட கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், நீங்கள் நிம்மதியான நல்ல உறக்கத்தை பெற முடியாது.பாஸ்தாரொட்டி மற்றும் பாஸ்தாவில் மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் குளுக்கோஸாக மாறுகின்றன. சர்க்கரை உணவுகளும் அதே விளைவுகளை உங்கள் உடலில் ஏற்படுத்துகின்றன. இது ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்துகின்றன.சாக்லேட்சாக்லேட்டில் காஃபின் நிறைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் திறனைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியின்மை மற்றும் கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியடையாலாம்.சிப்ஸ்ஃபிரான்டியர்ஸ் ஆஃப் சைக்காலஜியின் ஆய்வின்படி, சிப்ஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், ஜீரணிக்க நேரம் எடுக்கும், மேலும் இரவில் அவற்றை சாப்பிடுவது அமைதியின்மை மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் பயங்கராமன கெட்ட கனவுகளையும் ஏற்படுத்துகிறது. இதனால், உங்களால் நிம்மதியான தூங்க முடியாது.சூடான கோகோஇது சர்க்கரை, பால் மற்றும் கோகோ பவுடரைப் பயன்படுத்தி தாயாரிக்கப்பட்ட உணவாகும். இதை சாப்பிடும்போது, அடிக்கடி உடலை உடனடியாக சூடாக்குகிறது. இரவில் இந்த உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக உங்க இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது.தயிர்ஆயுர்வேதத்தின்படி, இரவில் தயிர் உட்கொள்வது சளி உருவாவதற்கு வழிவகுக்கிறது. சுவாச அமைப்பு முறையைத் தடுக்கிறது, மூளைக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. மேலும் அமைதியின்மை மற்றும் மோசமான கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால், உங்கள் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.சோடாசோடாவில் சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளடக்கம் நிறைந்துள்ளது, இது தூக்கத்தின் போது கூட மூளையை நேரடியாக தூண்டுகிறது மற்றும் விரும்பத்தகாத கனவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

Advertisement

Advertisement

Advertisement