• May 18 2024

இலங்கையில் பொருளாதார நெருக்கடி; வெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படும் அதிகளவான குழந்தைகள்

Chithra / May 5th 2024, 1:17 pm
image

Advertisement


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1,700 குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

அதிகளவான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் தத்துக்கொடுக்கும்போது அது குறித்து  பதிவாளர் திணைக்களத்துக்கு தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு  கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன.  

பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சினைகளினாலே குழந்தைகளைப் பிறருக்கு தத்துக்கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . 

நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்களும்  அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி; வெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படும் அதிகளவான குழந்தைகள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1,700 குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.அதிகளவான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் தத்துக்கொடுக்கும்போது அது குறித்து  பதிவாளர் திணைக்களத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு  கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன.  பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சினைகளினாலே குழந்தைகளைப் பிறருக்கு தத்துக்கொடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்களும்  அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Advertisement

Advertisement