• May 04 2024

பிரித்தானியாவில் தமிழரின் அடையாளம் சுமந்து மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட ஈழத் தமிழர்! samugammedia

Chithra / Apr 24th 2023, 11:24 am
image

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் இலண்டன் மரதன் ஓட்டம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின் உதவி அமைச்சர் திரு சான்.சுந்தரம் தமிழ் இனத்தின் அடையாளமான எம் தேசிய கொடியினை தாங்கி  மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

ஏராளமான மக்கள் வீதிகளின் இரு பகுதியிலும் நின்று மரதன் ஓட்டத்தில் பங்குப்பற்றியவர்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு ஈழத்தமிழர்களும் எம் தேசியக் கொடியுடன் நின்று தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.

பிரித்தானியாவில் விடுதலை புலிகள் அமைப்பின் தடையினை நீக்கக் கோரி நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கையின் முதல் கட்ட நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து  எம் தேசியக் கொடியினை மக்கள் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் அனைத்து இடங்களிலும் ஏந்தி எம் உரிமை போராட்டத்தை உலக மக்களுக்கு வலியுறுத்தி வரும் இவ்வேளையில் திரு சாண் சுந்தரம் எம் தேசியக்  கொடியை பொது வெளியில் தாங்கி வந்தது உந்து சக்தியாக அமைந்துள்ளது. 

லண்டன் Greenwich பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் ஓட்டம் Westminister வழியாக St. Jems park இல் முடிவடைந்தது

பிரித்தானியாவில் தமிழரின் அடையாளம் சுமந்து மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட ஈழத் தமிழர் samugammedia கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் இலண்டன் மரதன் ஓட்டம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின் உதவி அமைச்சர் திரு சான்.சுந்தரம் தமிழ் இனத்தின் அடையாளமான எம் தேசிய கொடியினை தாங்கி  மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.ஏராளமான மக்கள் வீதிகளின் இரு பகுதியிலும் நின்று மரதன் ஓட்டத்தில் பங்குப்பற்றியவர்களுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு ஈழத்தமிழர்களும் எம் தேசியக் கொடியுடன் நின்று தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.பிரித்தானியாவில் விடுதலை புலிகள் அமைப்பின் தடையினை நீக்கக் கோரி நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கையின் முதல் கட்ட நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து  எம் தேசியக் கொடியினை மக்கள் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் அனைத்து இடங்களிலும் ஏந்தி எம் உரிமை போராட்டத்தை உலக மக்களுக்கு வலியுறுத்தி வரும் இவ்வேளையில் திரு சாண் சுந்தரம் எம் தேசியக்  கொடியை பொது வெளியில் தாங்கி வந்தது உந்து சக்தியாக அமைந்துள்ளது. லண்டன் Greenwich பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் ஓட்டம் Westminister வழியாக St. Jems park இல் முடிவடைந்தது

Advertisement

Advertisement

Advertisement