கில்மிஷாவின் வெற்றியை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியில் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றார்.
நேற்று (17) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
இதனையடுத்து கில்மிஷாவின் வெற்றியை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் கலையரங்கில் பெரிய திரையில் இறுதிப்போட்டி திரையிடப்பட்டது.
இதனை பெருமளவானவர்கள் கூடியிருந்து பார்வையிட்டனர்.
கில்மிஷா சரிகமப லிட்டில் சம்பியனாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊர்மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
சமூக வலைத்தளங்களிலும் கில்மிஷாவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறும் மெய்மை நிகழ்ச்சிகளில் (reality show) முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஈழத்தை சேர்ந்த சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
மகுடம் சூடினார் ஈழத்து குயில் கில்மிஷா. வெற்றியை கொண்டாடிய யாழ். மக்கள். கில்மிஷாவின் வெற்றியை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியில் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றார்.நேற்று (17) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.இதனையடுத்து கில்மிஷாவின் வெற்றியை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் கலையரங்கில் பெரிய திரையில் இறுதிப்போட்டி திரையிடப்பட்டது.இதனை பெருமளவானவர்கள் கூடியிருந்து பார்வையிட்டனர்.கில்மிஷா சரிகமப லிட்டில் சம்பியனாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊர்மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.சமூக வலைத்தளங்களிலும் கில்மிஷாவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறும் மெய்மை நிகழ்ச்சிகளில் (reality show) முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஈழத்தை சேர்ந்த சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.குறித்த போட்டியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானியும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.