• Nov 26 2024

இலங்கையில் முட்டைக்கு தட்டுப்பாடு - விலையும் உயர்ந்தது

egg
Chithra / Oct 7th 2024, 1:45 pm
image

 

சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு தலையிட்டு, இந்த இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி, முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் ஒரு முட்டையை, 30 ரூபாய்க்கு வழங்க முடியும் என்கின்றனர்.

அண்மைக்காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விலை போன முட்டையின் விலை மீண்டும் 40 ரூபாயை தாண்டியுள்ளது.

இதன் பின்னணியில்தான் இந்த நாட்டில் முட்டை உற்பத்தி அதிகபட்சமாக உள்ளதாகவும் இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதாலேயே இந்நிலை ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் முட்டைக்கு தட்டுப்பாடு - விலையும் உயர்ந்தது  சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசு தலையிட்டு, இந்த இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி, முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் ஒரு முட்டையை, 30 ரூபாய்க்கு வழங்க முடியும் என்கின்றனர்.அண்மைக்காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விலை போன முட்டையின் விலை மீண்டும் 40 ரூபாயை தாண்டியுள்ளது.இதன் பின்னணியில்தான் இந்த நாட்டில் முட்டை உற்பத்தி அதிகபட்சமாக உள்ளதாகவும் இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதாலேயே இந்நிலை ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement