• May 03 2025

யாழில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் உயிரிழப்பு

Chithra / Apr 15th 2025, 3:24 pm
image

 

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். 

வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் உயிரிழப்பு  யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது.விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now