• Nov 21 2025

யாழில் இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த முதியவர்! - வலைவீசும் பொலிஸார்

Chithra / Nov 21st 2025, 8:08 am
image

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்றிரவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

நீர்வேலி - அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுப்பையா யோகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணைக்கு சென்றவேளை அங்கு நின்ற இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். 

இந்நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். 

தாக்குதல் நடாத்திய இருவரும் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இளைஞர்கள் தாக்கியதால் உயிரிழந்த முதியவர் - வலைவீசும் பொலிஸார் யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்றிரவு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி - அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுப்பையா யோகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணைக்கு சென்றவேளை அங்கு நின்ற இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடாத்திய இருவரும் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement