• Nov 26 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Sep 8th 2024, 12:47 pm
image

 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் அதுகுறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்து வருவதாகவும்,

தற்போது வரை தேர்தலை நடாத்துவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தவேண்டியிருக்கும் எனவும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் அத்தகைய சூழ்நிலையில் முதலில் நாடாளுமன்றத் தேர்தலையும், தாமதமின்றி அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் நடாத்துவது குறித்து ஆணைக்குழு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு  நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.அத்துடன் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் அதுகுறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்து வருவதாகவும்,தற்போது வரை தேர்தலை நடாத்துவதில் எவ்வித தடங்கல்களும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.இதேவேளை புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தவேண்டியிருக்கும் எனவும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.இருப்பினும் அத்தகைய சூழ்நிலையில் முதலில் நாடாளுமன்றத் தேர்தலையும், தாமதமின்றி அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும் நடாத்துவது குறித்து ஆணைக்குழு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement