• Apr 03 2025

பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து பொலிஸாருடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்!

Chithra / Oct 2nd 2024, 11:43 am
image


பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று  கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. 

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று பங்கேற்கவுள்ளனர்.  

அதேநேரம் தேர்தல் சட்ட மீறல்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து பொலிஸாருடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று  கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று பங்கேற்கவுள்ளனர்.  அதேநேரம் தேர்தல் சட்ட மீறல்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement