• Oct 23 2024

பொதுத் தேர்தலுக்கான செலவின அறிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

Chithra / Oct 22nd 2024, 8:05 am
image

Advertisement

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும். 

இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்   எச்சரித்துள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக  759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது

அவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில்   738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான செலவின அறிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்   எச்சரித்துள்ளார்.இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது.அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக  759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுஅவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில்   738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement