• Apr 01 2025

நாடளாவிய ரீதியில் கிடைத்த தேர்தல் முறைப்பாடுகள் - பொலிஸார் துரித விசாரணை

Chithra / Mar 27th 2025, 9:36 am
image

 

நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் மாத்திரம் 7 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இம்மாதம் 24 ஆம் திகதி இரு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 25 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு வன்முறை சம்பவம் உட்பட 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடுமையான வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

மேலும் மாத்தளை  போமலுவ, அகலவத்தை மற்றும் ஹரஸ்கம ஆகிய வீதிகளிலும், யடவத்த நகரிலும் பீரிதேவல வீதியின் இருபுறமும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் மாத்தளை பிராந்திய பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவெல வீதி, நிககொல்ல சந்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் கிடைத்த தேர்தல் முறைப்பாடுகள் - பொலிஸார் துரித விசாரணை  நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் மாத்திரம் 7 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அதற்கமைய இம்மாதம் 24 ஆம் திகதி இரு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 25 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு வன்முறை சம்பவம் உட்பட 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகேகொடை முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடுமையான வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.மேலும் மாத்தளை  போமலுவ, அகலவத்தை மற்றும் ஹரஸ்கம ஆகிய வீதிகளிலும், யடவத்த நகரிலும் பீரிதேவல வீதியின் இருபுறமும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் மாத்தளை பிராந்திய பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்தோடு மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவெல வீதி, நிககொல்ல சந்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement