• May 12 2024

தேர்தலை ஒரு வருடகாலத்திற்கு பிற்போடவேண்டும் - ரணிலின் நிலைபாட்டுடன் ஒத்துபோன விக்கி! SamugamMedia

Chithra / Feb 18th 2023, 3:49 pm
image

Advertisement

உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டணியின் காங்கேசன்துறை அலுவலகத்தில் இன்றையதினம் வலி. வடக்கின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தேர்தல் நடைபெறும் என்றால் அதற்கு தயாராவே இருப்பதாகவும், ஆனால் நாட்டின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு பிற்போடுவதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழலில் தேர்தலை நடத்தினால் நாட்டில் மேலும் குழப்பங்களே ஏற்படும் என்றும் குறிப்பாக எந்த கட்சியும் பெரும்பான்மையான வாக்குகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றும் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைத்தே செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையில் தொடர்ந்து பாதீடு தோற்கப்படுவதை விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேர்தலை ஒரு வருடகாலத்திற்கு பிற்போடவேண்டும் - ரணிலின் நிலைபாட்டுடன் ஒத்துபோன விக்கி SamugamMedia உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டணியின் காங்கேசன்துறை அலுவலகத்தில் இன்றையதினம் வலி. வடக்கின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தேர்தல் நடைபெறும் என்றால் அதற்கு தயாராவே இருப்பதாகவும், ஆனால் நாட்டின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு பிற்போடுவதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய சூழலில் தேர்தலை நடத்தினால் நாட்டில் மேலும் குழப்பங்களே ஏற்படும் என்றும் குறிப்பாக எந்த கட்சியும் பெரும்பான்மையான வாக்குகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றும் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.எனவே பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைத்தே செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ் மாநகர சபையில் தொடர்ந்து பாதீடு தோற்கப்படுவதை விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement